இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இலக்கிய வாசகன் எதிர்கொள்ளும் தடைகள் என்ன, இலக்கியக் கருத்துக்களைச் சொல்வது எப்படி என்பதுபோன்ற பல வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் கட்டுரைகள் இவை. உலக இலக்கியக்களத்தில் சென்ற இருநூறாண்டுகளில் நிறைய விவாதிக்கப்பட்ட அடிப்படைகள் இவை. ஆனால் தமிழ்ச்சூழலில் இவற்றை பேசுபவர்கள் குறைவு. இவற்றை அறியாததனாலேயே பலர் ஆரம்பகட்ட குழப்பங்களையே தங்கள் சிந்தனைகளாக கொண்டிருக்கிறார்கள். அவர்களை அந்தச் சிக்கல்களில் இருந்து விடுவித்து உண்மையான கலைத்தேடல்களுக்குச் செலுத்த இந்த விவாதங்களால் இயலும்.
Be the first to rate this book.