வாசிக்கும் பழக்கம் வேறு எந்தவொரு ஊடகத்தைக் காட்டிலும், உங்கள் வாழ்க்கையை கண்ணிமைக்கும் நேரத்தில் மாற்றி விடக் கூடும். மேலும் எந்த புத்தகம் எந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்பது உங்களுக்கே தெரியாது. நீங்கள் சாத்தியம் என்று அதற்கு முன் ஒருபோதும் நினைத்திராத வகையில், உங்களுக்கு ஊக்கம் அளித்து உங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்றிவிடும்.
பர்க் ஹெட்ஜஸ் ஒரு நூலாசிரியர், பேச்சாளர் மற்றும் தொழிலதிபர். தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் பொருளாதார சுதந்திரத்திற்கும் பத்து ஆண்டுகளுக்கு மேலாகக் குரல் கொடுத்து வந்துள்ளவர் அவர். அவருடைய ஏழு புத்தகங்கள் இன்றுவரை உலகம் நெடுகிலும் பத்துக்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, இருபது லட்சம் பிரதிகளுக்கு அதிகமாக விற்பனையாகியுள்ளன. அவர் தன்னுடைய மனைவியுடனும் நான்கு குழந்தைகளுடனும் ஃபுளோரிடாவில் தம்பா வளைகுடா பகுதியில் வசித்து வருகிறார்.
Be the first to rate this book.