வாசிக்காத புத்தகத்தின் வாசனை நம் உள்ளங்களை நிரப்பும் இளையோர் குறுநாவல். ‘பச்சை வைரம்’, ‘சஞ்சீவி மாமா’ போன்ற அற்புதமான நாவல்களின் ஆசிரியரிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள மற்றொரு படைப்பு இது. சம்யேரோகியே கிராமத்தில் செம்மரம் கடத்தி வாழ்க்கைப்பாட்டை நடத்தி வரும்
பம்பா பலடேவின் மகன் அக்கான், அப்பாவுக்கு உதவியாக மரத்தூள் சேகரிக்கும் பணியில் ஈடுபடுகிறான்.
வானொலியில் கேட்க நேர்ந்த ஒரு நேர்காணலில் ’உயிர் தரும் மரம்’ என்ற ஒரு நூலைப் பற்றி ஒரு நாள் முழுக்க உலக நாடுகள் பலவற்றில் இருந்து பலரும் தமது வாசக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதைக் கேட்கிறான். ‘‘புத்தகங்களுக்கு உயிர் உண்டு. அவை பேசும்…” என்று தொகுப்பாளினி பேசும் வார்த்தைகள், அக்கானின் மனதில் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன. ‘‘யாராவது எங்கள் ஊர்ப் பள்ளிக்கூடத்திற்கு இந்தப் புத்தகத்தை அனுப்புவீர்களா?” என்று வானொலிப் பெட்டியிடம் கத்திக் கேட்கிறான். அது பேசாது எனத் தெரிந்ததும் மவுனமாகிறான். அப்பாவின் தொழில், சட்ட விரோதமானது; அது, குற்றம் எனத் தெரிந்து அதைத் தடுக்க வகையறியாமல் வேதனையுடன் கண்ணீர் விடும் அக்கானுக்கு நம்மில் யாராகிலும் ‘உயிர் தரும் மரம்’ நூலை அனுப்பி வைக்க முடியுமா?
Be the first to rate this book.