கவித்தொகை: சீன இலக்கிய வரலாற்றின் முதல் நூல்.
சீனாவின் அரசியல், கலை மற்றும் சமூக வாழ்வை நிர்ணயித்த நூல்.
நாட்டுப் பாடல்கள், விழாப் பாடல்கள், வேண்டுதல் பாடல்களின் தொகுப்பு.
மிக நெடியதும் வளமானதுமான சீன மரபு இலக்கியக் கருவூலத்திலிருந்து எந்த நூலும் தமிழில் இதுவரை நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதில்லை என்ற வசை இன்று பயணியால் கழிந்தது.
- ஆ.இரா. வேங்கடாசலபதி
மூவாயிரமாண்டுப் பழமையையும் முற்றிலும் வேறுபட்ட மொழியமைப்பையும் கடந்து சீனச் சாயல் சிதையாமல் தமிழாகியிருக்கும் ‘கவித்தொகை’யைத் தாம் கலந்து பயிலும் எவரும் அது காட்டும் வாழ்வின் துடிப்பையும் கவித்துவத்தையும் உணர முடியும்; தமிழ்ச் செவ்வியல் இலக்கியத் தொடர்புடையோரெனில், மேலும் ஆழ்ந்து திளைக்க முடியும்; பழந்தமிழ்ப் பனுவல்களைச் சீனச் செவ்வியல் ஒளியில் துலக்கிக் காட்ட முடியும்.
Be the first to rate this book.