சு. தியோடர் பாஸ்கரனின் சூழலியல் நூல் வரிசையில் இது மூன்றாவது நூல். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் நாம் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட பேராபத்துகளையும் இழப்புகளையும் சொல்வது மட்டுமல்ல, நமது பொறுப்புகளையும் இந்தக் கட்டுரைகள் சுட்டிக் காட்டுகின்றன.
'தமிழர்களைப் போல இயற்கையைப் போற்றியவர்களும் இல்லை. தமிழர்களைப் போல இயற்கையை மறந்தவர்களும் இல்லை. தேவைக்கு இயற்கையைப் பயன்படுத்தாமல் பேராசைக்கு இயற்கையைச் சுரண்ட ஆரம்பித்த பிறகுதான், மனிதன் உணவைக் கொஞ்சமாகவும் மாத்திரைகளை அதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. மரம் என்பது மனிதனைப் போல பூமிக்கு பாரமான உயிர் அல்ல. தன் ஒவ்வோர் உறுப்பாலும் இந்த பூமியை ஜீவனோடு வைத்திருக்க உதவும் கருப்பொருள். பறவைகளும் விலங்குகளும் இன்னும் ஒவ்வோர் உயிரினமும் அப்படித்தான்’ என்பதை உயிரினங்களின் அழகியலுடன் தியடோர் பாஸ்கரன் சொல்லும்போது படிக்கவே சுவாரஸ்யமாய் இருக்கிறது. இந்த ஆர்வத்தை பள்ளிப் பருவத்தில் இருந்தே அனைவருக்கும் ஊட்ட வேண்டும் என்பதும் இவரது கோரிக்கை.
சக உயிரினங்கள் மீது அன்பு வேண்டும் என்பதை அழகாய்ச் சொல்லும் புத்தகம்!
Be the first to rate this book.