மாதவராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா ' என்ற நாமக்கல் கவிஞரின் வாக்கிற்கொப்ப கதையின் நாயகி தனது தோழிக்கும், எதிர்பாராது ஒரு நல்ல குடிலில் சந்திக்கும் கதாநாயனுக்கும் வாழ்க்கையில் ஓர் ஊன்றுகோலாய் உயிர்நாடியாய் விளங்கும் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து அவர்கள் பொருளாதார நிலையில் உயர்ந்து உன்னத்தை எட்ட ஏணியாய் விளங்குகிறாள். சுருங்கச் சொன்னால் மெழுகுவர்த்தியாய் உருகி வெளிச்சத்தைத் தரும் அருமையான கதாபாத்திரம். சிறந்ததொரு நாவலைப் படித்த நிறைவை வாசகர்களுக்கு அளித்துள்ளார் நூலாசிரியர்.
Be the first to rate this book.