குழந்தைக்குச் சோறூட்ட வானத்தைக் காட்டி, நிலாவைக் காட்டி, அதன் அழகை ரசிக்கச் செய்து, விண்ணின் விசித்திரத்தை முதன்முதலாக அன்னை அறிமுகப்படுத்துகிறாள். அதுமுதல், பரந்து விரிந்த விண்ணைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் நமக்குள் அதன் பிரமாண்டம், மெய்சிலிர்க்கும் எண்ண அலைகளை ஏற்படுத்துகிறதே. மனத்தை ஈர்க்கும் வானின் நீல நிறம், பளிச் பளிச்சென மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், தேய்வதும் வளர்வதுமாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் வெண்ணிலா, அவ்வப்போது பூமியில் எங்கேனும் விழுந்துவிடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் விண்கற்கள், இதோ இன்றைக்கு நான் பூமியை நெருங்கியிருக்கிறேன்; இந்த சந்தர்ப்பத்திலேயே என்னைப் பார்த்துவிடுங்கள், இனி என்னைப் பார்க்க வேண்டுமானால் நூறு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று சொல்லி ஆசையைத் தூண்டிவிடும் கிரகங்கள்... இப்படியாக விண்ணைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் நமக்குள் ஆச்சர்யங்கள் அலைமோதும். உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் உடையவர்களான நம் நாட்டிலும் வான சாஸ்திரம் உச்சத்தில் இருந்துள்ளது.
Be the first to rate this book.