அறிவும் உணர்ச்சியும் ஒன்றையொன்று தழுவியபடி வெளிப்பட்டிருக்கும் அ.ரோஸ்லின் கவிதைகள், கன்னித்தீவு மூஸாவின், பெட்டியில் அடைபட்டிருக்கும் லைலா ஒரு கட்டத்தில் வெளியே வந்து உலகை வியந்து பார்க்கும் தன்மையுடன் தனக்குள் பல கேலிகளையும் கொண்டுள்ளது. போக இறைஞ்சும் தன்மையோ, பக்தி மார்க்கங்களோ தென்படாத, கூடவே சமூகத் தனிமையில் மற்றமைகள் மீதான அக்கறைகளையும் கொண்டுள்ள இத்தொகுப்பு கவிஞருக்கு உள்ளும், புறமுமான நவீன மாற்றங்களின் புதிய அடையாளமாய் வந்திருக்கிறது எனலாம்.
Be the first to rate this book.