வாக்குப் பதிவு இயந்திரம் இல்லாமல் இன்று நம்மால் ஒரு தேர்தலை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் வாக்குப் பதிவு இயந்திரம் இல்லாமல் தேர்தல் நடந்த காலங்களை நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கும். உண்மையில் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் தேர்தலை நடத்தி முடிப்பது என்பதே மாபெரும் சாதனைதான். அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் என்பது வரப்பிரசாதம். ஆனால் இன்றும் கூட இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை நம்பாமல், மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே மாறவேண்டும் என்கிற குரல்கள் ஒலிக்கத்தான் செய்கின்றன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வரமா சாபமா? இந்தக் கேள்வியை அலசும் இந்த நூல், இதை ஒட்டி வேறு முக்கியப் பகுதிகளையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறது. இந்தியாவில் நடந்த முதல் தேர்தல், வெளிநாடுகளில் இன்று தேர்தல் நடக்கும் முறை, வாக்குப் பதிவு இயந்திரத்தால் அரசியலில் ஏற்பட்ட பாதிப்பு, கட்சிகளின் குற்றச்சாட்டு, நீதிமன்றங்களின் பதில்கள், தேர்தல் ஆணையத்தின் சவால்கள் என்று பல நுணுக்கமான விவரங்களைப் பேசுகிறார் சூ. சக்கரவர்த்தி மாரியப்பன்.
Be the first to rate this book.