வினோத்தின் குறிக்கோள் ஒரு விதத்தில் அவனுக்கே என்னவென்று தெரியவில்லை என்று சொல்லலாம். குழப்பமாக, அவன்
அம்மாவை போட்டோ எடுத்த காட்சிகள் அவன் மனத்தில் தடுமாறின. இப்படிச் செய்யலாமா நீ, என்று சித்ராவின் மார்பின் சட்டையை மூர்க்கத்தனமாகக் கிழித்தான். சித்ரா 'வீல்' என்று அலறியது. வெளியே காரில் காத்துக்கொண்டிருந்த தம்புவுக்கு லேசாகத்தான் கேட்டது. வாய்மையே சில சமயம் வெல்லும்' முதலில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் தொலைக்காட்சித் தொடராக வெளி வந்த போது இதற்குச் சில சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் இந்த எதிர்ப்புகள் வலுவிழந்துவிட்ட நிலையில் கதையின் அடிப்படையில் உள்ள மனித நேயமும் சமூக யதார்த்தங்களும் மாறவில்லை
Be the first to rate this book.