வாழ்வின் ஆயிரக்கணக்கான நாண்களை ஒற்றைக் கையால் மீட்டுதல்
காலம் செல்லச் செல்ல வாழ்வின் மீது படிந்துள்ள சொரசொரப்புகள் நீங்கி பளிங்குபோல ஆகிவிடுமென நம்புகிறோம். ஆனால் அதுவோ மென்மேலும் சொரசொரப்பாகிக்கொண்டே போகிறது. வெறுமே பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறோம். நம்மிடம் அனுமதி கேட்காமல் மானங் கெட்ட கண்ணீரும் வழிந்துத் தொலைகிறது. கோபம் கொப்பளிக்கையில் மூக்கில் ஒரு பந்தை சொருகிக்கொண்டு நாம் எண்ணற்ற கோமாளித்தனங்களை அரங்கேற்றுகிறோம். சில நேரம் எதுவும் செய்யமுடிவதில்லை. சில நேரம் எதையும் செய்யமுடிகிறது. அப்படியான கையாளாகாத் தனங்களும் சாப்ளின் சண்டைகளும் அதற்கிடையில் செல்லும் சில சொல்லாலான தேள்களும் உள்ள தொகுதி இது.
Be the first to rate this book.