புறச்சிக்கல்களுக்கும் அகப் போராட்டங்களுக்கும் இடையிலானவை கவிஞர் மஞ்சுளா வின் கவிதைகள். ஒரு பெண்ணின் சுயத்திற்கும் அவள் சார்ந்து வாழ்கிற சமூகம் மற்றும் குடும்ப உறவுகளுக்கும் இடையே நிகழ்கிற உளவியல் சிந்தனைகளை இவரது கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
ஒரு பெண்ணைப் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் அவர்களது கனவில் அவளை அறிந்திராத கனவொன்று பாலை நிலம்போல் விரிந்து கிடக்கிறது. ஒரு பெண் என்பவள் புறக்கண்களால் பார்க்கப் படுபவர் அல்ல என்பதை இயற்கையில் காணப்படுகிற மரங்கள், பறவைகள், விலங்குகள், ஆறுகள் ஆகியவற்றின் வண்ணங்களைக் கொண்டு இவரது கவிதைகள் வழியே ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியத்தில் பெண்ணின் காதல், காமம், தனிமை, கசப்பு போன்றவை நிறமாகவும், நிறமற்றும் விரவியுள்ளன.
- சக்தி ஜோதி
Be the first to rate this book.