பொட்டலின் சலசலப்பு சத்தம் மெதுவாகக் கேட்கிறது. பொட்டலுக்கு வெளியே சென்ற மந்தகாளி மருத மரத்தை அடைந்தான். வடக்கு நோக்கிச் செல்லும் மரக்கிளையைப் பார்த்தான். மரக்கிளையில் இருந்த மரப்பல்லி கண்களில் தென்பட்டது. மரப்பல்லியின், "கெத்... கெத்.." சத்தமானது காரிக்காளை நின்று விளையாடும் பொட்டல் திசையைக் காட்டியது.
மருத மரத்திற்குச் சற்று முன் நின்று கொண்டிருந்த நொண்டிக் கருப்பனைக் கூப்பிட்டான். சைகையினால் காரிகாளை நின்று விளையாடும் இடத்திற்குப் போகச் சொன்னான். மருத மரத்தினை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டான். மருத மரத்தின் அடியில் இருக்கும் செம்மண்ணை எடுத்துப் பிடிமண்ணாகக் கட்டினான்.
* நாவலிலிருந்து…
Be the first to rate this book.