நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பாலுறவு முறைகளைக்கூட பேசுவதும் எழுதுவதும் பாவமாக கருதப்படுகிற ஒரு பண்பாட்டுச் சூழல் இங்கு உருவாகி கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிறது. தாகம் பசி போல பாலுறவும் நம்மால் தவிர்க்கப்பட முடியாத இயல்பான உணர்வுகளில் ஒன்றாகும். இன்னும் சொல்லப் போனால் இதில் கிடைக்கிற மகிழ்ச்சிக்கும், மனநிறைவுக்கும் ஈடு இணை கிடையா. ஆனால் இதைப்பற்றிய எந்த வித வெளிப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாத பொதுப்புத்தியை உருவாக்கியுள்ள ஒரு சமூகத்தில் மாற்றுக் கருத்துகளை பேசவும் எழுதவும் துணிச்சல் தேவை. நிறுவப்பட்டுள்ள ஒழுங்கு நியதிகளை ஒதுக்கி வைத்து விட்டு திறந்த மனதுடன் படிக்க வேண்டிய கவிதைகள் இவைகள். கொங்கு மண்ணின் பேச்சு வழக்கிலான கவிதைகள் இத்தொகுதிக்கு கூடுதல் சிறப்பை சேர்க்கின்றன. இந்தத்தொகுதியின் கவிதைகள் 1991-லிருந்து 2024 வரை வா.மு.கோமுவால் எழுதப்பட்ட கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவைகள்.
Be the first to rate this book.