Boat People என்று அடையாளப்படுத்தப்படும் அகதிகளுடைய வாழ்நிலைமைகளின் சித்திரமே இந்த நாவல். தமிழ் சூழலுக்கு இது இன்னொரு வாசல். இந்த வாசலில் புதிய அறிதல்களையும் அனுபவத்தையும் உண்டாக்குகிறார் தாமரைச்செல்வி. வன்னிச் சூழலை தன்னுடைய எழுத்துக்களில் முதற்கவனமாகக் கொண்டு எழுதிவந்த தாமரைச்செல்விக்கும் இது புதிய அனுபவம்.
தாய் நிலத்தில் வாழமுடியாதென்ற நிலை உலகெங்கும் புகலிடம் தேடி பயணிப்போரை உற்பத்தி செய்கிறது. இப்படி புகலிடம் தேடி பயணிப்போரின் வாழ்க்கைக் கதைகள் முடிவற்றவை. அவற்றின் துயர நிழல் இந்த பூமியை அழுத்தக்கூடிய அளவுக்கு பாரமானது. இதில் படகு மூலமாக ஆபத்தான வழியில் பயணம் செய்து அகதித் தஞ்சம் கோருவதும், அதை ஏற்க முடியாதென அரசுகள் மறுப்பதும் வலியின் உச்சம். இந்த நிராதரவின் தத்தளிப்பு சக மனிதர்களை உலுக்குவது. இந்த நாவலிலும் இதுவே மையம்.
பொருளாதார பிரச்சனைகளும் வளர்ச்சியும் அவற்றை முறைப்படுத்தும் போது உண்டாகும் குறைபாடுகளும் அரசியல் உட்பட பல்வேறு நெருக்கடிகளையும் சம அளவில் உருவாக்கி அகதிகளை உற்பத்தி செய்கின்றன. இதில் ஒரு தரப்பினரே இந்த நாவலிலும் உள்ளனர். இவர்கள் இலங்கையில் வன்னியிலிருந்து புறப்பட்டு அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் மனிதர்கள். இவர்கள் பயணிக்கும் இந்து மகா
சமுத்திரத்திலிருந்து பசுபிக் மகாசமுத்திரம் வரையில் நிகழும் மாபெரும் அனர்த்த நாடகத்தின் ஒளியும் நிழலும் இந்த நாவலின் உடலாகவும் உயிராகவும் கொண்டுள்ளன.
- கருணாகரன்
Be the first to rate this book.