கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், கானுயிர் ஆர்வலர் என பன்முகத் தளங்களில் அறியப்பட்ட கோவை சதாசிவத்தின் சூழலியலைப் பற்றிய எளிமையான நேரடியான புத்தகமிது.
மலைகள், காடுகள், பறவைகள், விலங்குகள், நதிகள், கடற்கரைகள் என இயற்கையின் கூறுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் அறிய வேண்டிய அரிய தகவல்களுடன் இயற்கையைத் தாயாகவும் காடுகளைக் குல சாமியாகவும் உளமார நம்புகிற உணர்வுப் பூர்வமான ஒரு மனதின் வெளிப்பாடாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.
நாளெல்லாம் இயற்கையைச் சீண்டிக்கொண்டிருக்கும் மனிதனை வலுவான வார்த்தைகளால், வாதங்களால், குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது இந்தப் புதையல்.
5 Must read
Lots of information and nice and simple narration.
Karthikeyan 18-07-2018 02:14 pm