இன்று ‘தமிழன் இல்லாத நாடில்லை’ எனப் பெருமிதத்தோடு சொல்கிறோம். அப்படி இருக்கும் தமிழனின் மூதாதையர்கள் என்ன துயர் அனுபவித்தார்கள் என்ற வரலாற்றுப் பதிவு இங்கு இல்லை. காரணம், ‘தமிழர்கள் வரலாற்றுப் பிரக்ஞையற்றவர்கள்’ என நாமே சொல்லிக் கொள்கிறோம்.
இப்படி மலேசியாவுக்குக் கூலிவேலை செய்யச் சென்ற தமிழர்களை இரண்டாம் உலகப்–போர் சமயத்தில் ஜப்பான் ராணுவம் பிடித்துச் சென்று, சயாம் - பர்மா ரயில் பாதையை உருவாக்க முயன்றது. பயங்கர மலைகளும், சீற்றமான நதிகளும், சதுப்பு நிலங்களுமான அந்தப் பகுதியில் அவசரக் கோலத்தில் இந்த ரயில்பாதையை அமைக்கும் பணியில் பரிதாபமாக உயிரிழந்தவர்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள். இப்போதும் ‘மரண ரயில் பாதை’ என அழைக்கப்படும் அந்தப் பாதைக்காகத் துயருற்ற தமிழர்களின் வரலாற்றைப் பேசுகிறது இந்த ‘உயிர்ப் பாதை’.
ஹிட்லரின் ஜெர்மனியில் நாஜிக்களிடம் சிக்கி யூதர்கள் அனுபவித்த கொடுமைகளுக்குத் துளியும் குறைவற்றது தமிழர்கள் சந்தித்த இந்தத் துயரம். ஆனால் இதை உலகம் பேசுகிறதா? முதலில் தமிழினம் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்த நூல் உதவும்..
Be the first to rate this book.