இலக்கியப் படைப்பின் ஒரு வாசகம் நிகழ்த்தும் மாயங்களை, ஒரு கோட்டுச் சித்திரமும் நிகழ்த்திவிடும். எழுத்தையும் ஓவியத்தையும் ஒன்றாகப் பதிப்பிக்கும் முயற்சிகள் தமிழில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனலாம்.
அந்த வகையில் இந்தப் புத்தகம் ஒரு புதிய முயற்சி. ‘கரிசல் காட்டுக் கடுதாசி’, ‘கோபல்லபுரத்து மக்கள்’ ஆகிய தொடர்களில் வாசித்து ரசித்தவர்களுக்கு அந்த நினைவு ஒருபோதும் மறக்காது. கி.ரா.வின் எழுத்தையும் ஆதிமூலத்தின் கோட்டோவியத்தையும் ஒரே புத்தகத்தில் கொண்டுவர புதுவை இளவேனில் எடுத்த முயற்சியின் பலன் இந்தப் புத்தகம்.
அந்தத் தொடர்களிலிருந்து சில அற்புதமான வரிகளும், அவற்றைப் பிரதிபலிக்கும் விதமாக அற்புதமான கோட்டோவியங்களுமாக இப்புத்தகம் உருவாகியிருக்கிறது. இலக்கிய வாசகர்களுக்குப் பெரும் விருந்தளிக்கும் படைப்பு இது!
Be the first to rate this book.