இஸ்லாத்தைக் குறித்துப் புனையப்படும் கட்டுக்கதைகளில் மிக முக்கிய பங்குவகிப்பது பெண் அடிமைத்தனம் என்பது தான். ஆனால் உண்மை அப்படி இல்லை, இஸ்லாத்தைப் போல் பெண்களுக்கு முக்கியத்துவமும் கண்ணியமும் தரும் மார்க்கம் வேறில்லை என்பதே உண்மையாகும்.
நபி(ஸல்) அவர்களின் அழைப்புப்பணியின் தொடக்கமே பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக இருந்தது. கணவன் இறந்துவிட்டால் செல்வங்களைப் பிரிப்பதைப் போல பெண் களைத்தான் பங்கிட்டார்கள் அன்றைய அறிவீனர்கள். அவர்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல் பெண் என்பவள் கண்ணியமானவள், அவளது காலடியில் சுவர்க்கம் உள்ளது, அவளுக்கு சொத்தில் பங்குள்ளது, அவள் எவ்விதத்திலும் குறைந்தவள் அல்ல என்பதை உலகிற்கு எடுத்துரைத்தது இஸ்லாம்தான்.
இன்றும் இஸ்லாம் பெண்களுக்கு எவ்வளவு கண்ணியமும், உயர்வும் கொடுக்கின்றது என்பதற்கு சாட்சியாக உலக அளவில் ஏற்பட்டுவரும் சமூக மாற்றங்களும், மறுமலர்ச்சிகளும் உதாரணங்களாகும்.
இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் தத்தம் துறைகளில் பெரும் புகழும் சாதனைகளும் படைத்த 18 பெண் ஆளுமைகளின் சுருக்கமான விவரங்கள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
Be the first to rate this book.