யாழ்பாணத்திலிருந்து வெளிவந்த ‘திசை’, கொழும்பிலிருந்து வெளியான ‘வீரகேசரி’ நாளிதழ் மற்றும் ‘சரிநிகர்’, கனடாவிலிருந்து பிரசுரமான ‘செந்தாமரை’ ஆகிய இதழ்களில் வெளிவந்த சேரனின் பத்திகளின் தொகுப்பு இந்நூல்.
ஈழப் போராட்டம், ஐரோப்பியப் பயண அனுபவங்கள், தமிழ் தேசியவாதம், திரைப்படம், மொழி, இதழியல், இசை, இந்திய ராணுவத் தலையீடு, ஈழத்து முஸ்லிம்களின் நிலை எனப் பல பொருள்கள் சுதந்திரமான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. புதிய தகவல்களையும் புதிய பார்வையையும், அங்கதத்துடன், தெளிந்த கவித்துவ நடையில், சேரன் வெளிப்படுத்தியுள்ளார். கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், இதழியல் சுதந்திரம் ஆகியவற்றை இவை முன்னிறுத்துகின்றன.
கோபத்தையும் சோகத்தையும் உள்ளார்ந்த தொனியில் வெளிப்படுத்தும் சேரனின் இந்தக் கட்டுரைகள் தீவிர விவாதங்களை எழுப்பவல்லவை.
Be the first to rate this book.