இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் மாயத்தன்மையுடன் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றுக்கும் யதார்த்த உலகத்துக்கும் இடையே தெளிவான ஒரு பிணைப்பை உணரலாம். விவசாயம் செய்வதற்குக் கையகல நிலமில்லாத துயரம் அல்லது வீட்டில் கழிப்பறை இல்லாததால் காதலியால் நிராகரிக்கப்படும் துயரம் என்றெல்லாம் இந்தப் பிணைப்பு இழைந்தோடுகிறது. பெரும்பாலான கதைகளின் பரப்பு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் என்பதால் அந்தப் பிரதேசமே அலாதியான கனவுத்தன்மையுடன் இந்தக் கதைகளில் மிளிர்கிறது.
Be the first to rate this book.