இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் வழியாக எப்போதும் ஊடாடிக்கொண்டிருக்கும் தனது தனிமையை, தனக்குக் கிடைத்துள்ள வாழ்வின் ஆன்மாவை, புராதனமான மொழி அழகியலுடனும், நவீன அறிவியல் தன்மையுடனும் கலந்த கலவையாகச் சொல்லியுள்ளார் கவிஞர்.
முதல் தொகுப்பிலிருந்து சற்று விலகி முதிர்ச்சியான மொழி நடையும் நவீனத்துவமும் ஒன்றுகூடி இத்தொகுப்பின் கவிதைகளில் வெளிப்பட்டுள்ளது. தோல்விகளையும், கசப்புகளையும், நிராகரிப்புகளையும் ஒரு கோலிக்குண்டைப் போன்று விழுங்கி நிற்கும் சுபாவம் கொண்டவர் தாமரைபாரதி.
அவை, அவருடைய தனிப்பட்ட அனுபவமாக மட்டும் தேங்கி நின்றுவிடாமல், புதிய குரலாகவும், நேர்த்தியான மொழி வடிவத்துடனும் இக்கவிதைகளில் வெளிப்பட்டுள்ளன.
Be the first to rate this book.