நவீன இலக்கியக் கொளகிகள்,விமர்சனக் கோட்பாடுகள், இசங்கள் குறித்த மீள்பார்வை எனப் பரந்த பார்வையை உடைய இக்கட்டுரைகள், சாதி, வர்க்கம் எனும் பேதங்களோடு எழுத்துகளை அணுகும் நமது பாரபட்சத்தன்மையைச் சுட்டிக்காட்டுபவை. இசங்களுக்குள் எழுத்துகளின் பொருட்பரப்பைச் சுருக்கிப் பார்க்கும் நம் வாசிப்பு முறை, சொற்களில் மறைந்து கிடக்கும் வரலாற்றுப் பின்புலத்தை அறிய முற்படுவதில்லை. ஒத்துப்போகும் கருத்து, ஒத்துப்போகாதவர்களின் கருத்து என்ற ரீதியில் முன்தீர்மானங்களோடு செயல்படும் வாசிப்பின் பலவீனங்களைப் பேசும் இந்நுல், மறுவாசிப்பின் உண்மையான தேவையை வேண்டுகின்றது.
Be the first to rate this book.