எல்லா காலங்களிலும் கலைகள் மீது அளப்பறிய காதலோடு வாழ்வது தமிழருக்கே உரிய தனிப்பண்பாக இருக்கிறது. அது ஒரு பசியைப் போல நிலைத்து நிற்கிறது. ஒரு குழந்தையென உறங்குகிறது. பசித்தால் அழுகிறது. பால் கொடுத்தால் அயர்ந்து உறங்குகிறது. குழந்தைக்கு பகலும் இல்லை. இரவும் இல்லை. அதைப்போல கலைத்தாகம் உள்ளவர்கள் தமிழ் திரைக்கலைஞர்கள். அவர்கள் மக்களை காலந்தோறும் ஆற்றுப்படுத்தி வந்தார்கள். இதன் காரணமாகத்தான் அவர்கள் காலத்தால் அழியாது நிலைத்து நிற்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை உற்று கவனித்து அவர்களின் பாடல்களைப் பதிவு செய்தது மிகப்பெரிய விஷயமாகும். ஒரு திராட்சையின் ரசத்தை மிக எளிதாக சுவைக்கிறோம். ஆனால், அந்த திராட்சை மண்ணில் இருந்து நீரையும், மண்ணின் சாரத்தையும், சூரிய ஒளி எல்லாற்றையும் உள்வாங்கி ரசமாக மாறுகிறது. அப்படித்தான் ஒரு பாடலோ, இசையோ எப்படி உருவாகுகிறது என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் ப.கவிதாகுமார் இந்நூலில் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார்.
Be the first to rate this book.