சில மனிதர்களைப் பற்றிப் படிக்கும்போதும், கேள்விப்படும் போதும் வியப்பு மேலிடுகிறது, ‘என்ன மாதிரி வாழ்ந்திருக்கிறார்கள் இவர்கள், எத்தகைய குணங்களைக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்!’ என்பதான வியப்பு.
அவர்கள் கொண்டிருந்த கொள்கைகள், சித்தாந்தங்கள், வழிகள், நெறிகள் என எல்லாமும் சரிவர இயங்க, அவர்கள் மற்றுமொரு தலையாய பண்பையும் கொண்டிருந்தார்கள் என்பது புரிகிறது. அதுவே அவர்களை தொடர்ந்து இயக்கியிருக்கிறது, அவர்களது பாதையில் வாழ வைக்கும்
சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு மேலேறி உயர்ந்துசெல்ல உதவிய பண்புகளில் அது முக்கியமானது என்பது புரிய வருகிறது. ‘உறுதி’ என்ற அந்த ஒரு பண்பு எந்த நிலையிலும் அவர்களை தொடர்ந்து பயணிக்க வைத்திருக்கிறது, உயர வைத்திருக்கிறது.
‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில் மாதாமாதம் வெளிவந்து வாசகர்களின் வாழ்வில் புரிதல்களையும் வளர்ச்சியையும் தந்த சில தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், தொகுக்கப்பட்டு ஒரே நூலாக இதோ உங்கள் கைகளில் – ‘உறுதியோடு உயர்வோம்!’
Be the first to rate this book.