காஷ்மீர் பற்றிப் பேசும் போதெல்லாம் உறுப்பு 370 பற்றிய பேச்சு வராமல் போகாது. அந்த உறுப்பு 370 காஷ்மீரிகளின் அடிப்படை அடையாளங் களை, உரிமைகளைக் காப்பது என்றே பாஜக தவிர அனைத்து இந்தியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால் பாஜகவோ உறுப்பு 370 இந்திய ஒற்றுமையைக் கெடுக்கிறது எனக் கூறுகிறது. ஆனால் உண்மையிலேயே உறுப்பு 370 பற்றி ஆழ்ந்து இந்த நூல் ஆய்கிறது. அந்த வகையில் அந்த உறுப்பு காஷ்மீரிகளின் உரிமை முறியா? அடிமைப் பொறியா? என ஆய்ந்து உண்மையை வெளிக் கொண்டு வருகிறது. 370 அரசியலை வைத்து நேரு, படேல் தொடங்கி இன்றைய மோடி வரை எப்படி எல்லாம் காஷ்மீர் மக்களின் உரிமை வாழ்வுடன் விளையாடுகின்றனர் என வரலாற்று உண்மைகளுடன் அம்பலப் படுத்துகிறது.
Be the first to rate this book.