சமூக வலைத்தளங்களில் பல இளைஞர்கள் அரசியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள். முக்கியமாக, 2017-ல் நடைபெற்ற சல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு, சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாமல் களத்திற்கும் பல இளைஞர்கள் வருகிறார்கள் . இது ஒரு மகிழ்ச்சியான விசயம் ஆகும்.
அப்படிக் களத்திற்கு வருகின்ற இளைஞர்களிடம் அரசியல், சமூகம் சார்ந்து காணப்பட்ட புரிதல், அவர்களுக்கு இந்தச் சமூகமும், ஊடகமும் திணித்த ஒன்றாகவே உள்ளது. இந்தத் திணிப்பு பெரும்பாலும், அவர்களைத் தங்கள் இலக்கிற்கு எதிர்த் திசையில் ஓட வைக்கிறது.
திணிப்புகளைத் தவிர்த்து, தங்கள் ஆற்றல் மிகுந்த அறிவைக் கொண்டு இந்திய, தமிழக அரசியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகளை ஆய்ந்து, தீர்வுகளை நோக்கிய பயணத்திற்கான ஒரு சிறு கையேடாக இருப்பதே "உரிமைகளின் காவலன்" புத்தகத்தின் நோக்கம்.
Be the first to rate this book.