இன்றைய நகரத்து மக்களிடம் இரவு, பகல் போன்ற காலமாற்றங்கள் எந்த வித்தியாசத்தையும் நிகழ்த்துவதில்லை.
பொருளாதாரத் தேடலே முதன்மை பெறுவதால், அதைத் தாண்டிய சுக, துக்கங்கள் இம்மாதிரி மக்களின் வாழ்விலிருந்து தூர விலகிப் போகின்றன.
அம்மாதிரியான விளிம்பு வாழ் மக்களை முதன்மைப்படுத்திய பதிவுகள் தமிழில் குறைவு.
இந்நூல் அந்தக் குறையைப் போக்குவதில் முன் நிற்கிறது. பகலில் வண்ணங்களைப் போர்த்திக் கொள்ளும் சென்னை நகரை, வியர்வை வீச்சமெடுக்கும் இரவுப் பொழுதுகளே களைகட்டச் செய்கின்றன என்பதை, இந்நூல் பல்வேறு உணர்வுகளை முன்னிறுத்தி வெளிப்படுத்துகிறது.
Be the first to rate this book.