கதை கேட்க யாருக்குத்தான் புடிக்காது? மனித வாழ்க்கை நாளுக்கு நாள் பரிணமித்துக் கொண்டே இருந்தாலும் கதை கேட்பதில் இருக்கும் ஆர்வமும் ஆனந்தமும் துளிகூட குறைவதே இல்லை. வெவ்வேறு மூலங்களில் இருந்து கதைகளைத் திரட்டி செவிக்குள் செலுத்தி அறிவை ஊற்றெடுக்க வைப்பதில் கைதேர்ந்த கெட்டிக்காரர்கள்தான் நம் பாட்டிகள். பாட்டி கதைகள் என்பது நம் தமிழ் பாரம்பரியத்தில் பதிந்த ஒன்று. அதை அழிக்க எத்தனை ஆண்ட்ராய்டு வந்தாலும் முடியாது. நாற்காலியின் நுனியில் திக்திக்கென்று நகரும் கதையோட்டத்துடன், பதற்றம் பிறந்து வேர்வை சுரக்க, நகர்வுகளின் நோக்கத்தை நோட்டமிட்டு நகம் கடிக்க, விறுவிறுவென வேகம் கொண்ட கதையைத் தன் செல்லப் பேத்திக்குச் சொல்வதே இக்கதை. எதிர்காலத்தில் தேன்கனி ருசியை ஒத்த இன்வாழ்வை வாழ்ந்திட சிறுவயதில் விதைத்த பொன்விதையே இவ்வுறக்கம் தெளிந்த உண்மை.
Be the first to rate this book.