'நாங்க கூலிக்காரங்க எங்கள எங்க ஊருக்கே அனுப்பிடுங்க கவர்மண்டே மூளியாய்க் கிடக்குது எங்க வீடும் வாசலும் வேற வழியில்லாம வீட்ட, குடும்பத்த விட்டுட்டு வந்து மொழி தெரியாத நகரங்கள்ல வேல செய்றோம் எங்களக் கூட்டிக்கிட்டு வந்தவங்க அப்படியே விட்டுட்டுப் போயிட்டாங்க எங்கே இருக்காங்கன்னு தெரில எங்களுக்கு ஏதாவது செய்யுங்க கவர்மண்டே கொரானாவால எல்லாரும் வீட்டுல ஒளிஞ்சிக்குவாங்கன்னு நடுரோட்டுல அநாதயா நாங்க இப்படி நிப்போம்னு எங்களுக்குத் தெரியாது வயித்துப் பாரத்தக் குறைக்கத்தான் நாங்க நாடு விட்டு நாடு வந்து உழைக்கிறோம் எங்களுக்கு ஏதாவது செய்யுங்க கவர்மண்டே மூளியாய்க் கிடக்குது எங்க வீடும் வாசலும் எங்கள எங்க ஊருக்கே அனுப்பிடுங்க கவர்மண்டே நாங்க கூலிக்காரங்க...'
- நாவலிலிருந்து…
Be the first to rate this book.