ஒரு வீட்டில் இருக்கிற ஐந்து நபர்களுக்கும் வீடு ஐந்து வெவ்வேறு விதமாக இருக்கிறது. இந்த ஐந்தும் சாராத ஒரு ஆறாவது விதத்தில் வாழவும் சாகவுமே, வீட்டுக்குள் அந்த ஐந்துபேரும் அடித்துப் பிடித்து முயல்கிறார்கள். ஒருவரிடமிருந்து ஒருவரை ஒளித்து, ஒருவரிடமிருந்து ஒருவர் தப்பித்து அதே வீட்டின், அதே தெருவின் பகலிரவுக்குள் பதுங்கிப் பதுங்கித் திரிகிறார்கள். ஒரு வீட்டிற்கே ஒரு தெருவுக்கே இந்தப் பாடு எனில் ஒரு மாநகருக்குக் கேட்பானேன்? கேட்பானேன் என்று சௌகரியமாக ஒதுங்கிக்கொள்ளாமல், ‘நீ என்ன கேட்பது அல்லது கேட்காது போவது?’ என லட்சுமி சரவணகுமார் அவருடைய இருட்டில் வடிகட்டிய ஒரு மாநகரத்தை நம் முன் வீசுகிறார். இவர்களில் ஒருவரைக்கூட என்னுடைய மேற்கு மாம்பல நாட்களில், நான் யூகமாகக்கூடவேனும் கண்டதும் அனுமானித்ததும் இல்லை. அப்படி நான் காணாத ஒன்றாகவும் அனுமானம் தாண்டியதாகவும் அந்த உலகமும் மனிதர்களும் இருப்பதால்தான் எனக்கு அது ஈர்ப்புடையதாக ஆயிற்று.
- எழுத்தாளர் வண்ணதாசன்
Be the first to rate this book.