இத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. லக்ஷிமி சரவனக்குமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத் துலங்குகிறது. பெருநகர வெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்திரமாக முன்வைக்கும் லக்ஷ்மி சரவனக்குமாரின் உப்புநாய்கள் பதைபதைப்பையும் பெருஞ் சலனத்தையும் மனதில் உண்டாக்குகிறது.
4
இது வரை இருட்டு உலகம்/சமூகத்துல குற்றம் என கூறப்படும் தொழில்களை செய்பவர்கள் பற்றி எழுதுப் பட்ட புதினங்களில் உப்புநாய்கள் ஒரு நவீனம். சம்பத்,மணி, சுந்தர், பாஸ்கர்,உடையார் ,ஷிவானி, இவாஞ்சலின், சோஃபியா,செல்வி, தவுடு, டாக்டர் முத்துலட்சுமி, பாபு, செல்வியின் கணவன்,மகேஷ்,சம்பத்தின் தாய், ஷிவானி கணவன்(சேட்), ராஜீ,ராஜீ மனைவி, ஆதம்மா, ஆர்த்தி, கட்டுமான வேலை செய்ய ஒரிஸ்ஸா & ஆந்திரா வில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் என இந்த நாவலின் உருவங்கள் அனைத்தும் இந்த உலகில் வெவ்வேறு பெயர்களில் வேறு வேறு நிலங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். உப்பு நாய்கள் நாவலில் என்னை கவர்ந்த வசனங்கள் பல அதில் சில, (பிராட்வேயைச் சுற்றியிருக்கும் நிறைய வீதிகளில் லட்சங்களிலும், கோடிகளிலுமாய் சொத்துக்கள் கொண்ட பெரிய மனிதர்கள் சுற்றிக்கொண்டுருந்தனர். ஒருவருக்கும் இவர்களின்(ஏழைகளின்) காலி வயிறுகள் குறித்த கவலைகளோ அல்லது யோசனைகளோ இருந்திருக்கவில்லை. பசித்தமனிதன் மிருகமாகும் நாள்வரையிலும், சராசரி மனிதன் பசியைப்பற்றி நினைப்பதில்லை போலும். மிருகங்களால்தான் வேட்டையாட முடிகிறது. மனிதன் வேட்டையாடுதலை மறந்து போய் நூற்றாண்டுகளாகிவிட்டது. அந்நகரம் பசியால் வதைப்படும் ஒரு சமூகத்தைத் தனக்குள் உருவாக்கிக் கொண்டிருந்த தினங்களில், அச்சமூகம், மிருகங்களாகுமென்பதை உணர்ந்திருக்கவில்லை.) (எல்லோருக்கும் தேவைகள் அதிகமாயிருக்கிறது. ஒன்று கிடைத்துவிட்டால் இன்னொன்று, அதுவும் கிடைத்துவிட்டால் இன்னொன்று. இப்படி, தினம் தினம் அவர்களின் தேவைகள் பெருகிக்கொண்டேதானிருக்கின்றன, எண்ணமுடியா மழைத்துளிகளைப்போல்.) - கலைச்செல்வன் செல்வராஜ்
Kalaiselvan Selvaraj 12-04-2018 09:20 pm