நிலமென்றும் நிலவென்றும்
நதியென்றும் தீயென்றும்
பூவென்றும் புதிரென்றும்
தேரென்றும் தெய்வமென்றும்
காலகாலமாகப் பலரும்
பலவாறாகப் பெண்ணை
புகழ்ந்தும் புனைந்தும்
விதந்துகொண்டிருக்க - அவளோ
அத்தனைத்துயரங்களுக்கு நடுவேயும்
ஒருபோதும் கசந்துபோகாத
வெல்லக்கட்டியெனத்
தனக்குள் தானே
இனித்துக் கிடக்கிறாள்!
- சக்திஜோதி
Be the first to rate this book.