வாழ்தல் எனும் எளிய தேவைக்காக குடும்பங்குடும்பமாய் மலை ஆறு, சிற்றூர் என நிரந்தரமற்று சுற்றியலையும் நாடோடிப் பழங்குடிகளைப் பற்றிய அவலங்களே இந்நூல், வாழ்வெனும் அடிப்படையான அம்சம் தினந்தினம் கேள்விக்குள்ளாவதே இதன் மைய இழை.
இவ்வினத்திற்கெதிரான ஆதிக்க சமூக அடக்குமுறைகளும் துன்பங்களும், பாதுகாப்பும் எவ்வித உத்திரவாதமுமற்ற துயரவாழ்வும் அப்பட்டமாக எழுத்தாகியுள்ளது. அத்துடன் பழங்குடி இனத்திகுள்ளான கடுமையான சட்டதிட்டங்களும் வன்மமான தண்டனைகளும் அதிர்ச்சி தரும் வீதம் பதிவாகியுள்ளன.
பல்வேறு விருதுகள், பரிசு பாரட்டுகளுடன், மராத்திய மொழியில் சாகித்திய அகாதெமி விருதும் பெற்ற இந்நூல் மானுட விடுதலையை தன் வலி மிகுந்த குரலில் உரத்துப் பேசுகிறது.
Be the first to rate this book.