தஸ்தாயெவ்ஸ்கியின் ஜென்டில் கிரீச்சர் என்னும் சிறுகதையினை எடுத்துக்கொண்டு, அதனை இலங்கை உள்ளநாட்டு யுத்தச்சூழலுக்குப் ஏற்ப பெயர்த்து உருவாக்கப்பட்டத் திரைப்படம் ‘வித் யூ விதவுட் யூ’. வாழ்க்கையின் அர்த்தம் குறித்த தேடலில் தத்ததுவவிசாரத்தைக் கலையாக்கிய கலைஞன் தஸ்தாயெவ்ஸ்கி. பௌதீகரீதியில் தேர்ந்து கொள்ளும் புறநிலையில் இருந்து தஸ்தாயெவ்ஸ்கியின் பாத்திரங்களை கறுப்பு வெள்ளையாக நிறுத்தி நாம் புரிந்துக் கொள்ள முடியாது. த ஜென்டில் கிரீச்சருக்கும் ‘வித் யூ விதவுட் யூ’ படத்திற்கும் பாத்திரக் கட்டமைப்பு என்னும் அளவில் நூறுசதம் பொருத்தமுள்ளது. பிரசன்ன விதானகே இலங்கையின் மிக முக்கியமான இயக்குநர். அவரது மொழி சிங்களம் என்றாலும் அவரது சினிமா மொழி உலகின் எல்லா மக்களுக்குமானது. இலங்கை போர்ச்சூழளுக்குப் பிந்தைய படங்களில் இந்த படம் மிக முக்கியமானது.
இந்த நூல் ‘வித் யூ விதவுட் யூ’ திரைப்படத்தின் திரைக்கதை பிரதியாக மட்டுமின்றி. ஒரு அரசியல் சினிமாவை எப்படி பார்க்க வேண்டும் என்கிற யமுனா ராஜேந்திரனின் கட்டுரையோடும், இயக்குநர் பிரசன்ன விதானகேயின் விரிவான நேர்காணல்களோடும் வெளியாகிறது. ஒரு சினிமா எப்படி உருவானது, அதனை எப்படி அனுகவேன்ன்டும் என்பதை வாசகர்களுக்கு உணர்த்தவல்லது இந்த புத்தகம்.
Be the first to rate this book.