வாழ்வின் இலக்கை அடைவதற்கு முதல் படி நம்மைப் பற்றி நாம் நன்றாக அறிந்தும் புரிந்தும்கொள்வதுதான். வாழ்வில் வெற்றி அடைபவா்களுக்கும் தோல்வி அடைபவா்களுக்கும் இதுதான் மிகப் பெரிய வித்தியாசம். மிகக் குறைந்த சதவிகிதத்தினரே தங்கள் வாழ்வை ரசித்து வாழ்கின்றனா். மகிழ்ச்சியும் ஊக்கமும் உள்ள மனதே பல விஷயங்களை ஆக்கப்பூா்வமாக சாதிக்கவும் செய்கிறது. அவ்வித மனமே பல உடல் மனநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் செய்கின்றது. இந்நூல் உங்கள் மனதின் எதிர்மறை எண்ணங்களிலிருந்து நீங்கள் விடுபட உதவி செய்கிறது.
5 தன்னை அறிந்து தலைவனாக உருவாவதற்கு உதவும் சிறந்த நூல்
நான் படித்த சுய முன்னேற்ற நூல்களில் டாக்டர் சித்ரா மேடம் அவர்கள் எழுதிய உன்னை தாண்டி வருவாயா என்பது ஒரு அற்புதமான நூல். இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று துடிப்போடு இருக்கும் அனைத்து வயதினரும் படிக்க வேண்டிய மிக அற்புதமான நூல். படிக்க படிக்க சுவாரஸ்யமும் உள்ள நூல். இந்த நூலை படிக்க படிக்க நானும் என்னை தாண்டி வெளிவந்து கொண்டே இருக்கிறேன் வெற்றியின் இலக்கை நோக்கி வீறு நடை போடுகிறேன். புத்தகத்தை எழுதிய டாக்டர் சித்ரா மேடம் அவர்களுக்கும், இப்படிப்பட்ட அற்புதமான புத்தகத்தை வெளியிட்ட வாசக சாலை பதிப்பகத்திற்கும் மற்றும் மிகவும் அற்புதமான அருமையான புத்தகத்தை விற்பனை செய்து கொண்டிருக்கும் நமது Common Folks நிறுவனத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன். Jc.S.D.A.Positive Jose Antony, Life Skill Coach & Business Consultant, FEB Consultancy, Karaikudi.
Positive Jose Antony 08-01-2025 09:32 am
5 காலத்திற்கு ஏற்ப அருமையான புத்தகம்.
இப்புத்தகம் ஆழமான கருத்துக்களைக் கொண்டுள்ளது. இன்றைய பெற்றோர்களும் , மாணவர்களும், இளைஞர்களும் கட்டாயமாக படிக்க வேண்டிய ஒன்று. இளைஞர்களே நாட்டின் வருங்கால தூண்கள் எனக் கருதும் போது, அவர்களை பொறுப்புணர்ச்சியுடனும், கடமையுணர்ச்சியுடனும், துன்பங்களை எதிர்கொள்ளும் பக்குவத்துடனும் உருவாக்க வேண்டியது நமது கடமை. இன்றைய இளைஞர்களை பார்க்கும் போது நாம் எதிர்பார்க்கும் முதிர்ச்சியுடன் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. டாக்டர் சித்ரா அரவிந்த் அவர்களின் இந்த புத்தகத்தை படிக்கும் போது நம் நாட்டின் இளம் தலைமுறையினரை வழிகாட்ட நல்லோர்கள் இருக்கிறார்கள் என்கிற மனநிறைவு ஏற்படுகிறது. ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரி நூலகத்திலும் இருக்கவேண்டிய புத்தகம் இது. பெற்றோர்கள் இந்த புத்தகத்தைப் படித்து தங்கள் பிள்ளைகளை சான்றோனாக வளர்த்து நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. டாக்டர் சித்ரா அரவிந்த் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். வாழ்க வளமுடன் !!
Thirunavukkarasu Ramasamy 26-12-2024 08:17 am