1998, 1999 ஆண்டுகளில் காலச்சுவடில் வெளிவந்த எட்டு நீண்ட நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். சிந்தனை உலகின், பண்பாட்டு உலகின், தத்துவ உலகின் எட்டு துருவங்களின் கருத்துத் தொகுப்பு. படைப்பாளி, அரசியல் கட்டுரையாளர், துறவி, நாடகாசிரியர் அல்லது பகுத்தறிவாளர், ஆன்மீகவாதி, மனித உரிமைப் போராளி, பின்நவீனத்துவக் கலைஞர், தத்துவ அறிஞர், புதிய முறை கதைசொல்லி எனப் பல முறைகளில் வகைப்படக்கூடிய அதே நேரத்தில் எந்த வரையறையையும் மீறி நிற்கக் கூடிய பன்முக ஆளுமைகளின் மனம் திறந்த பதிவுகள் இவை.
தாசீசியஸ், ஆற்றூர் ரவிவர்மா, மு. பொன்னம்பலம், எஸ். ராமகிருஷ்ணன், நித்ய சைதன்யயதி, சின்னக் குத்தூசி, சேரன், ரமேஷ் பிரேம் இவர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.
Be the first to rate this book.