ஒரு சக்தி நம்மிடம் இருந்தால் மட்டும் போதாது. அதைப் பயன்படுத்தவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள சக்தியைப் பயன்படுத்துவதற்கு சில வழிகள் இருக்கின்றன. நம்முடைய முன்னோர்கள் அனுபவத்தால் இந்த வழிகளை அறிந்து வைத்திருந்தார்கள். நவீன மனவியல் நிபுணர்கள் தங்கள் ஆராய்ச்சிகளின் மூலம் இந்த வழிகளைக் கண்டு பிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொண்டவர்களும், வெற்றி பெற்றவர்களும் இந்த வழிகளை அறிந்தோ அறியாமலோ கையாண்டு வந்திருக்கிறார்கள். மனித வாழ்க்கையில் வெற்றி அமைப்பு சில இயற்கை விதிகளுக்கு கட்டுப்பட்டே செயல்படுகிறது. இந்த விதிகளைப் பயன்படுத்தாத போது அல்லது முரண்பட்டு நடக்கின்றபோது வெற்றிகள் நம்மை ஏமாற்றி விடுகின்றன.
Be the first to rate this book.