தமிழர்கள் உடல் வலுவும் நலமும் பெற வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்பட்ட முதன்மையான நூல்களில் ஒன்று இது. தமிழர்களிடையே நிலவும் உணவுசார் மூடநம்பிக்கைகளைக் கடிந்துகொண்டு நவீன மருத்துவ அறிவியலில் உண்டாகிவரும் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழர்கள் உணவுமுறை, உடல் நலம் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினாலும், நவீன மருத்துவ அறிவியலை உரசிப் பார்க்கவும் இது தயங்கவில்லை. சித்தமருத்துவக் குடும்பச் சூழலிலிருந்து பெற்ற உள்ளூர் மருத்துவ அறிவும், உணவுப் பழக்கங்கள் பற்றிய அனுபவ அறிவும் சேர்ந்து மயிலை சீனி. வேங்கடசாமியின் இந்த உணவுக் கையேட்டினையும் கட்டுரைகளையும் பயன்மிக்கதாக்குகின்றன. உணவுப் பழக்கம் மாறுதல் பற்றி பெரியார் எழுதிய கட்டுரை ஒன்றும் பொருத்தம் கருதி இணைக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.