உணவு, நம் கொண்டாட்டங்களில் ஒன்று. ஆனால் உடல் உழைப்பு, வீட்டு வேலைகள், நடப்பது போன்ற உடல் செயல்பாடுகள் ஒருபுறம் குறைந்துவிட்ட நிலையில், உணவு சார்ந்த சாத்தியங்கள், சுவைகள் மறுபுறம் அதிகரித்துவிட்ட நிலையில் அதிகம் உண்பதே பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது. உடல் பருமன், சர்க்கரை நோய், இதயப் பிரச்சினைகள், ரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய்கள் பெருகுவதற்கு உணவும் முக்கியக் காரணம்.
நம் தாத்தா-பாட்டிகள், அப்பா-அம்மா காலத்தில் மருத்துவ, நவீன வசதிகள் குறைவு, அதேநேரம் அவர்கள் திட்டவட்டமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்ததால் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இன்றைக்கு வசதிகள் இருந்தும் வாழ்க்கைமுறை சார்ந்த-தொற்றா நோய்களால் பலரும் திடீரென உயிரிழக்கின்றனர்.
அவசர வாழ்க்கையில் உணவு சார்ந்த கவனம் பிசகி, வீட்டுக்கே சக்கை உணவு வகைகளை பெருமளவு வரவழைத்துச் சாப்பிடும் போக்கு அதிகரித்துவிட்டது. இந்தப் பின்னணியில் எதைச் சாப்பிடுகிறோம், எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவுக்குச் சாப்பிடுகிறோம், எதைச் சேர்க்கிறோம் - எதைத் தவிர்க்கிறோம் என்பது குறித்து நிறைய கேள்விகள், குழப்பங்கள், சந்தேகங்கள் நமக்கு இருக்கும்.
Be the first to rate this book.