கறுப்பினத்தவருக்கு கல்வி மறுக்கப்பட்ட அமெரிக்க சமூகத்தில் உனக்கெல்லாம் படிக்கவேவராது எனத் தூற்றப்படுகிறார் மேரி மெக்லியோட் பெத்யூன். தனது தீரா ஆசையை கனவுகளின் வழியே வெறியாக மாற்றிக் கொண்ட அவர் கருப்பினச் சிறுவர்களுக்கான முதல் பள்ளிக்கூடத்தை நிறுவி ஆயிரமாயிரம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதையே தன் வாழ்வின் ஒற்றை நோக்கமாய்க் கொண்டார்… மிகப்பெரிய அந்தப் போராட்டத்தை கமலாலயன் தனது பதைக்க வைக்கும் எழுத்தில் எழுச்சி குறையாமல் பதிவு செய்திருக்கிறார். தனக்கும் தன் பள்ளிக்கும் வாழ்வளித்த கொடையாளர் மேரி கிறிஸ்மானை சந்திக்கும் இடம் நெகிழ்ச்சி ஊட்டுகிறது. கல்விக்கான களப்போராளிகள் அவசியம் வாசிக்க வேண்டும்.
Be the first to rate this book.