உலகில் வாழும் உயிர்கள் யாவும் வாழ்வதற்காகவே ஜனித்திருக்கின்றன. எல்லா உயிர்களும் நிலைத்து வாழ்வதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவே பிரயாசைப்படுகின்றன. ஆனாலும், வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளில் சில சிக்கல்கள் மனிதனை ஆட்டுவிக்கின்றன. கால ஓட்டத்தில் அவையே தொடர்கதையாகி நீர்த்துப்போய் அலுப்புத்தட்ட துவங்கிவிடுகிறது. இத்தகைய சிறுசிறு பிரச்னைகளைக் கண்டு அவன் பயத்தின் பிடிக்கு ஆட்பட்டுப் போகின்றான். அதன் காரணமாக சரியான முடிவுகள் எடுக்கும் தருணங்களை தவறவிட்டு அவதிப்படுகிற நிலைக்கு உள்ளாகின்றான். அப்படிப்பட்ட சூழல்களை உணர்ந்து, வாழ்க்கையை துய்த்து அணுகி அனுபவிப்பதற்கான ரகசியங்கள் மனிதனுக்கு தேவைப்படுகின்றன. அந்த மந்திரத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த நூலின் வாயிலாக பயிற்றுவிக்கிறார். ஆனந்த விகடன்_ல் ஜக்கி வாசுதேவின் உனக்காகவே ஒரு ரகசியம் எழுத்தாளர்கள் சுபாவின் எழுத்தாக்கத்தில் தொடராக வந்தபோது அதைப் படித்து சத்குருவின் மானசீக சீடர்களானவர்கள் பலர். சிலர் நேரடியாக சத்குருவைச் சந்தித்து அவருடைய சமூகப் பணிக்கு உதவியாகத் தம்மையும் இணைத்துக் கொண்டனர் என்பது செவி வழிச் செய்தி.
Be the first to rate this book.