எந்தவொரு இருப்பிற்குள்ளும் இன்னுமொருஇருப்பிற்கானவெறுப்பினைவைத்திருக்கும் இந்திய தமிழ் இருப்பினுள் இருந்து ரசூலின் கவிதைகளை வாசிக்க நேரிடுகிறது. வாக்கு, மனம், காயம் இவைகளை பெரும்பாலும்இந்துயிசமும், அதன் அப்பட்டமானஉட்கிடக்கையான சாதியும் கைப்பற்றிக் கொண்டதை எதிர்த்துப் போராடும் எனக்கும் அல்லது எவருக்கும் ரசூலின் கவிதைகள் மற்றமைகளுக்கான ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் இன்னுமொரு புதிய அனுபவத்தை தரத் தயாராய் இருக்கின்றன. தன்னிலிருந்து மற்றமையாகஉயிர்த்தெழும் பெண்களின் சன்னமான,அதிநுட்பமான நினைவொலிகளை எழுப்பிக் கொண்டே இருக்கக் கூடியவை ரசூலின் கவிதைகள். குமரிமாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ரசூல் தனது கவிதைகளுக்காகவும் கருத்துகளுக்காகவும் தான் சார்ந்த சமய அதிகாரத்தின் ஒடுக்குமுறைக்குள்ளானவர். அதேசமயம் தமிழ் முஸ்லீம்களிடமும் நவீன கவிதைப் பரப்பிலும் பெருங்கவனத்திற்குள்ளானவர். சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட அவரின் மைலாஞ்சி கவிதைதொகுப்பிற்குப் பின் நீண்ட இடைவெளியில் இத்தொகுப்பு வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
Be the first to rate this book.