உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“யாருமே கஷ்டப்பட்டு உழைக்காமல், யா அல்லாஹ்! எனக்கு வாழ்வாதாரத்தைக் கொடு என்று கேட்காதீர்கள். ஏனென்றால் தங்கமும் வெள்ளியும் விண்ணில் இருந்து
கொட்டாது. ஏதாவது உழைப்பில் ஈடுபடுபவருக்குத்தான் அல்லாஹ் வாழ்வாதாரம் வழங்குகிறான்.” இவ்வாறு கூறிவிட்டுப் பின்வரும் வசனத்தை ஓதுவார்: “பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்” (திருக்குர்ஆன் 62:10)
(நிளாமுல் ஹுகூமதுல் இஸ்லாமிய்யா)
- உமர் (ரலி) நீண்ட நாட்கள் ஆட்சி செய்து அதிக வெற்றிகளைக் குவித்தவர்.
- அவருடைய ஆட்சியில் கருத்து வேறுபாடுகளே ஏற்படவில்லை.
- நீதிமிக்க ஆட்சிக்காக அவர் பட்ட சிரமங்கள், இன்னல்கள், துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
- தானும் தூங்காமல் தன்னருகில் இருப்பவரையும் தூங்கவிடாமல் ஆட்சி செய்தவர்.
- உமர் (ரலி) அவர்களின் வரலாற்றை காட்சிகளாக கண்முன்னே கொண்டு வந்து உயிரோட்டமாக நிறுத்துகிறது இந்த நூல்.
- இந்த நூலைப் புரட்டினால் போதும்; வேறெந்த நூலையும் புரட்ட வேண்டியதில்லை.
- அந்த வகையில் உமர் (ரலி) அவர்களின் வாழ்வு குறித்து ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் முழுமையாகப் பேசுகிறது இந்த நூல்.
உமர் (ரலி) அவர்கள்
செல்வம் சேர்க்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருக்கவில்லை. ஆடம்பர அதிகாரத்தை அவர் நாடவும் இல்லை. அவரது அதிகார நிலை அவரைச் சரியான பாதையில் இருந்து விலகிச் செல்லத் தூண்டவும் இல்லை.
தனது உறவினர்களோ, பிள்ளைகளோ மக்களை துஷ்பிரயோகம் செய்ய அவர் அனுமதிக்கவும் இல்லை.
அவரது ஒரே கவலை இஸ்லாத்திற்கு எவ்வகையிலேனும் உதவி செய்ய வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது.
தமது குடிமக்கள் அனைவருக்கும் உச்சபட்ச நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்பது மட்டுமே அவருடைய நோக்கமாக இருந்தது. அவர் வாழ்வின் குறுகிய காலத்திற்குள் அல்லாஹ்வின் பேருதவியால் அந்த இலட்சியங்கள் அனைத்தையும் அவர் அடைந்துகொண்டார்.
Be the first to rate this book.