வெளிநாடு செல்லும் ஒருவன் அங்கு சந்திக்கும் ஒரு அண்ணன் மற்றும் அவருடைய தங்கை என மூன்று பேர்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கும் கதை. மூன்று பேரின் உணர்வுகளை மட்டுமே கதையின் போக்காக செல்கிறது. இத்தனைக்கும் இது ஒரு காதல் கதை கூட இல்லை. காதலிக்கலாமா வேண்டாமா என அந்த கதாபாத்திரம் முடிவு எடுப்பதே கதையின் இறுதியாக இருக்கிறதே தவிர, காதலை பக்கம் பக்கமாக விளக்கும் கதை இல்லை இது. காதலும் இல்லை, நட்பும் இல்லை, விரோதமும் இல்லை, ஏதோ ஒன்றை தேடிச்செல்லும் நடவடிக்கைகளும் இல்லை பின்னே நாவலில் என்னதான் இருக்கிறது! உணர்வுகள். அதை நீங்கள் இந்த புத்தகத்தை படிக்கும் போது உணர்ந்துகொள்வீர்கள்.
Be the first to rate this book.