வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற பதினேழு நாடகங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் கதைச் சுருக்கம் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் பெரும்பாலான நாடகங்களின் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால், சுவாரஸ்யமான கதைப் பின்னணியும் சுவையான காட்சி அமைப்புகளும் கவிதைபோன்ற அழகு நடையும்தான். இவற்றுள், கதைக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து இந்தச் சுருக்கத்தைச் செய்துள்ளோம். இவை ஓர் ஆரம்பம்தானே தவிர, கண்டிப்பாக முழு நீள நாடகங்களுக்கு மாற்றாகிவிடாது.
என்றாலும், ஷேக்ஸ்பியரை வாசிக்க விரும்புகிறவர்கள், முதல்கட்டமாக இதுபோன்ற சுருக்கங்களைப் படிக்கலாம். அதன்பிறகு, உங்களுக்கு சுவையாகத் தோன்றும் நாடகங்களின் மூலப் பிரதிகளைத் தேடி வாசிக்கலாம்.
Be the first to rate this book.