சில கவிதைகளை வாசிக்கும் போது இதைத் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்று தோன்றும். திடீரெனக் கண்களுக்கு முன்னே வந்து சில கவிதைகள் தமிழாக்கம் செய்யும்படி கோரும். எந்தத் திட்டமிடலும் இன்றி நிகழ்ந்தவை, உருப்பெற்றவை இந்தத் தமிழாக்கக் கவிதைகள். நான் தமிழாக்கம் செய்ய இந்தக் கவிதைகளைத் தேர்ந்தெடுக்கவில்லை; இந்தக் கவிதைகள் தமிழாக்கம் செய்ய என்னைத் தேர்ந்தெடுத்தன.
கவிதைகளை அப்படியே வாசிப்பனுபவத்திற்காக வாசிப்பதற்கும், மொழியாக்கம் செய்யும்போது வாசிப்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. மனதோடு மனம்விட்டுப் பேசுவதைப்போல உணர்வோடு உணர்வைத் தீண்டுவதுபோல ஒரு புதுவித அனுபவத்தைத் தருவதுண்டு. அதற்காகவே இந்தக் கவிதைகளும் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை இதை எழுதுகையில் உணர்கிறேன்.
- மதுமிதா
அட்டை வடிவமைப்பு: ஆர்.சி.எம்
Be the first to rate this book.