"தினத்தந்தி"யில் "வரலாற்றுச் சுவடுகள்" நெடுந்தொடர் வெளியானபோது, நடிகர் கமல்ஹாசன் வரலாறு 70 வாரங்களாக வெளிவந்தது. அது இப்போது தினத்தந்தி பதிப்பகத்தால் "உலக நாயகன் கமல்ஹாசன்" என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 352 பக்கங்கள். முழுவதும் கண்ணைக் கவரும் வண்ணத்தில்! 6 வயதில் "களத்தூர் கண்ணம்மா"வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது; சினிமாவுக்காக பரத நாட்டியம் கற்றுக் கொண்டு "டான்ஸ் மாஸ்டர் ஆனது; 27 வயதில் நூறு படங்களில் நடித்து சாதனை புரிந்தது; தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 180&க்கு மேற்பட்ட படங்களில் நடித்து "உலக நாயகன்" ஆனது; 18 "பிலிம் பேர் விருது" விருது பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமையைப் பெற்றது; நடிகர், டான்ஸ் மாஸ்டர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடகர், கவிஞர், இயக்குநர், சினிமா தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் என்ற பெயரைப் பெற்றது; இரு முறை தேசிய விருது; கலைத்துறை சேவைக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் என்று கமல்ஹாசன் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. கமல்ஹாசனுக்குப் பிடித்த நடிகர் நடிகைகள், "நான் நாத்திகனா?" என்ற கேள்விக்கு அவரது அதிரடி பதில்கள், கமல்ஹாசன் உடல் தானம், அவர் கலந்து கொண்ட "பிக்&பாஸ்" நிகழ்ச்சி, அவர் அரசியல் பயணத்துக்கான முன்னோட்டம் மற்றும் அவர் நடித்த படங்களின் முழு விவரம் கொண்ட பட்டியல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 180-க்கும் மேற்பட்ட வண்ணப் படங்கள். எந்தவித கதாபாத்திரங்களையும் சிறப்பாக ஏற்று ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த "சகலகலா வல்லவன்", அகில இந்திய நடிகர்களை மட்டுமல்ல, ஆலிவுட் நடிகர்களையும் அசர வைத்த உலகநாயகன் கமல்ஹாசன் பற்றி இப்படி ஒரு புத்தகம் இதுவரை வெளிவந்தது இல்லை. கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் இந்நூல், தெவிட்டாத விருந்து.
Be the first to rate this book.