பத்து பேர் அடித்து துவைத்துக்கொண்டு வர நினைக்கும் உண்மையை தனது கடைக் கண் பார்வையால் கொண்டு வந்து விடுவாள். பல கோடி ரூபாய் கொடுத்து பெறவேண்டிய ரகசியத்தை தனது ஆசை வார்த்தையால் பெற்றுவிடுவாள். பணத்திற்கு மயங்காதவனைக்கூட அவளின் அழகால் மயக்கிவிடுவான்.
ஆண் எதிரியை அடித்துக் கூட வென்றுவிடலாம். ஆனால், ஒரு அழகியின் அழகை வென்று ரகசியத்தை காப்பாற்றுவது என்பது ஆணுக்கு மிக பெரிய விஷயம். பல ஆண்களின் உடல் பலத்தை காட்டிலும் ஒரு பெண்ணின் அழகு உளவுத்துறையில் மிக பெரிய ஆயுதம்.
இப்படி தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரை மட்டுமில்லாமல், கற்பு, மொழி, உறவு போன்றவற்றைப் பற்றி கவலைப்படாமல் தகவல் திரட்டிக் கொடுத்த உளவு ராணிகள் ஏராளம். ஒரு சிலர் மாட்டிக் கொண்டு நகர கொடுமைக்கு ஆளாகி இறந்திருக்கிறார்கள். சட்டப்படி சுடப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் தகவலைச் சேகரித்து வெற்றிகரமாக நாடு திரும்பியிருக்கிறார்கள்.
இறந்தவர்களுக்கு மலர்வலையமில்லை. நினைவுசின்னம் இல்லை. வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் இல்லை. பூங்கொத்தில்லை. எல்லாம் அவர்கள் வாழ்க்கையில் மர்மமாகவே இருக்கும்.
அப்படி நாட்டுக்காக மர்மமாக இயங்கிய நிஜ ‘உளவு ராணிகள்’ பற்றிய வரலாறு.
Be the first to rate this book.