"பத்தாவது உலகக் கோப்பை போட்டி ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறது இந்தியா. கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்து இறங்குகிறார்கள். விமான நிலையத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் துப்பாக்கி தாக்குதலுக்கு உள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிக்கிறார். ‘கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா நடத்தக்கூடாது’ என்று பயமுறுத்தல் விடுவிக்கிறார்கள் ‘வேர்ல்ட் கப் ஹேட்டர்’ என்கிற தீவிரவாதக் குழுவினர். இந்தச் சமயத்தில் இந்தியாவின் அணுஆயுத பலத்தை உளவு பார்ப்பதற்காக இந்தியா வரும் இங்கிலாந்தின் ஒற்றன் ஒருவனும், ஒரு அப்பாவி தமிழ்ப் பெண்ணும் யதேச்சையாக இந்த கிரிக்கெட் களேபரத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். தரணியின் சுறுசுறு எழுத்தில் விறுவிறுப்பான கதை."
Be the first to rate this book.